சனி, 12 மே, 2012

கோவிலுக்குள் இருந்து வானை நோக்கிய அதிசய ஒளி

என்னதான் உலகம் தொழில்நுட்ப யுகத்தில் இருந்தாலும் அமானுசியங்கள் அதிசயங்கள் என்பன அவ்வப்போது நடந்துவிடத்தான் செய்கின்றன். இவ்வாறான அமானுசிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் வியப்புக்குள்ளாக்குகின்றன:

அதில் சில செய்திகள் சில காலங்களுக்கு பின்னர் பொய்யான கட்டுக்கதை எனவும் ஆதாரங்களோடு நிருபிக்கப்படுவதும் உண்டு. வேற்றுக்கிரவாசிகள் பற்றிய பல்வேறு செய்திகள் இவற்றுக்கு உதாரணமாக கொள்ளலாம் . சரி விசயத்துக்கு வருவோம்..

இவ்வாறு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமே இது. ஆம் பல வருடங்களாக புகைப்படத்துறையில் பாண்டித்தியம் பெற்ற ஒரு இந்தியாவின் கரூர் மாவட்டம் பள்ளப்பாளையம் எனும் கிராமத்தில் இரவு நேரம் கோவில் ஒன்றை படம் பிடித்துள்ளார். அப்படி படம் பிடிக்கும் போது அவருடைய காமரா ஒரு நிமிடம் நின்று விட மீண்டும் ஆன் செய்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தில் இருந்து ஒரு ஒளிக்கீற்று வானை நோக்கி செல்வது புகைப்படத்தில் தெட்டத்தெளிவாக பதிவாகியிருந்தது. இதை பார்த்து உறைந்து போன அவர் ஊர் மக்களிடம் காட்டவே விடயம் காட்டுத்தீ போல பரவி ஊரே உறைந்து போனது..... இவ்வாறு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த ஒளிக்கீற்று என்ன? மர்மங்களின் முடுச்சுக்கள் அவிழ காணொளியை காணுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக