புதன், 16 ஜனவரி, 2013

கரு‌ப்பு தா‌ன் எனக்கு பிடிச்ச கலர்!!

பலரு‌ம் வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள்தா‌ன் அழகு எ‌ன்று‌ம், கரு‌ப்பு எ‌ன்றா‌ல் ஏதோ அ‌சி‌ங்கமான ‌நிற‌ம் எ‌ன்று ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். உ‌ண்மை‌யி‌ல் கரு‌ப்பான ‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள்தா‌ன் கொடு‌த்து வை‌த்தவ‌ர்க‌ள் எ‌ன்று சொ‌ல்ல வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் அவ‌ர்களது சரும‌ம் ஆரோ‌க்‌கியமாகவு‌ம், அழகாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ள் கரு‌ப்பு சரும‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

கரு‌ப்பான ‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள், த‌ங்களது உட‌ல் வாகு ம‌ற்று‌ம் உட‌ல் ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற ஆடைகளையு‌ம், அ‌ணிகல‌ன்களையு‌ம் மே‌க்க‌ப் சாதன‌ங்களையு‌ம் தே‌ர்வு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

த‌ங்களது ‌நிற‌த்தை ‌மி‌ளிர‌ச் செ‌ய்யு‌ம் வகை‌யிலான அல‌ங்கார‌ங்களை எ‌ப்போது‌ம் அழகாக செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

கரு‌ப்பானவ‌ர்க‌ள் ‌சி‌ன்னதாக ஒரு த‌ங்க நகை அ‌ணி‌ந்தா‌ல் கூட அவ‌ர்களது சரும‌த்‌தி‌ல் அது ‌மி‌ளி‌ர்‌ந்து அழகை‌க் கூ‌ட்டு‌ம் எ‌ன்பதை மறவா‌தீ‌ர்க‌ள். மு‌த்து வை‌த்த நகைகளை அ‌திகமாக அ‌ணியலா‌ம். எடு‌ப்பாக இரு‌க்கு‌ம்.

செவ்வாய், 15 ஜனவரி, 2013

கிராமத்துப் பொங்கல் எப்படி இருக்கும்?

உலகத் தமிழர்களின் உன்னதத் திருநாள் பொங்கல். உழவு கண்டு, விதைத்து, விளைச்சல் காணும் உழைப்பை உலகுக்கு  உணர்த்துவதுடன்,  உழைப்பில் விளைந்ததை உவகையோடு சமைத்தெடுத்து உறவுகளோடு பரிமாறிக் களிக்கும் ஒரு பண்பாட்டுத்  திருவிழாவாகவும் இந்நாள் இருக்கிறது. தானியக் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்த சோழநாட்டுத் தலைநகர் பூம்புகாரில் ஒரு காலத்தில் மழைக் கடவுள் இந்திரனுக்கென  28நாட்கள் Ôஇந்திரத்  திருவிழாÕ நடந்தது. இதுவே தமிழகத்தில் 4நாட்கள் நடக்கும் விழாவாகச் சுருங்கிப்போனதென்கின்றனர் ஆய்வாளர்கள்.  



பொங்கலுக்கு முதல்நாள் போகித் திருநாள். போகி என்றால் போக்கு என்றொரு பொருளுண்டு. தன் அத்தனை கெட்ட குணங்களையும் போக்கி விட்டு நலம்
சேர்த்துக் கொள்கிற நாளாகவே இந்நாள் போற்றப்படுகிறது. வடபுற மக்கள் வீட்டின் வீண் பொருட்களையெல்லாம் ரோட்டில் கொட்டி  நெருப்பிட்டுக் கொளுத்த, தென்புறத்து நம் கிராமத்து மக்கள் வீடு பெருக்கி, வெள்ளையடித்து தூசு துரத்துவதை போகியாக கடைபிடிக்கின்றனர். இந் நாளில்தான் புதுப்பெண் வீட்டார் மணமகன் வீட்டிற்கு தலைப்பொங்கல் சீர் அனுப்புகின்றனர். புத்தரிசியில் மட்டுமல்லாது, புதிய அடுப்பில் பொங்கலிடும் நோக்கில் பொங்கல் தினத்திற்கு முதல்நாளான இந்நாளில் கிராமங்களில் வீட்டு வாசல்களுக்கு எதிரில் புதுமண் குழைத்து அடுப்புகள் செய்வது  இன்றும் நடக்கிறது.

நல்ல மழை பெய்து நாடு செழித்திட விரதமிருந்து பொங்கல் தினத்தில் விரதம் முடிக்கிற பெண்கள் இன்றும் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட கிரா மங்களில்
அதிகமிருக்கின்றனர். பொங்கல் நாளில் அதிகாலைக் குளியல், புத்தாடையுடன் வீட்டு முற்றத்துக் கோலம் அவசியம் இருக்கிறது. வாசல்களில் தோகை விரித்த செங்கரும்பு கள் கட்டப்படுகின்றன. தரிசுநிலங்களில் தானாக முளைக்கிற கூரைப்பூவுடன், ஆவாரம்பூ, மாவிலை சேர்த்துக் கட்டிய அலங்காரம் வீட்டிற்குள்  தேவைக்குரிய அனைத்து இடங்களிலும் நடக்கிறது. முற்றக் கோலத்தின் மீது தலைவாழை விரித்து நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை விழுந்து
வணங்கிய பிறகே பொங்கலிடும் வேலை துவங்குகிறது.

சூரியோதய கிழக்குத் திசை நோக்கி அடுப்பில் புதுப்பானை வைத்து, புத்தரிசியிட்டு  பொங்கலிடப்படுகிறது. பானையின் வாய்ப்புறத்தில் தூர்களுடன் கூடிய புது மஞ்சள் கிழங்கும், கூரை, ஆவாரப்பூக்கள், மாவிலையுடன் பருத்த பனங்கி ழங்குகளும் Ôகாப்பாகÕக் கட்டப்படுகிறது. புதுக்கரும்புகளையும் அருகில் நிறுத்தி வைக்கின்றனர். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைக்கின்றனர்.  பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட வலப்புறம் பொங்கி வழிந்தால் சிறப்பென்ற நம்பிக்கை இருக்கிறது. பொங்கலிட்ட பானையின் புதுமஞ்சள் கொத் தினை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவரது கைகளில் தந்து ஆசி பெற்று இளம்பெண்கள் அந்த மஞ்சளை கல்லில் தேய்த்தெடுத்து பாதத்தில்  தடவிக் கொள்ளும் பண்பாட்டினையும் கிராமப்புறங்களில் காண முடிகிறது.

பொங்கல்சோற்றினை வீட்டு தெய்வங்கள் பெயரில் படையலிட்டு முடிவாக  அத்தனைபேருக்கும் விநியோகம் நடக்கிறது. பொங்கல் தினத்து வீட்டு சைவ
உணவில் சிறு கிழங்குடன் வெண், சர்க்கரைப் பூசணிகள், பச்சை  மொச்சை, வாழைக்காய் என குறிப்பிட்ட காய்கறிகளே அதிகம் இடம் பிடிக்கிறது. தமிழில் செல்வமென்றால் ÔமாடுÕ பொருள் தருகிறது. உழவுக்கும், தொழிலுக்கும் கை கொடுத்து செல்வந்தனாய் உயர்த்துகிற கால்நடைகளுக்கு உழ வன் கிரீடம் சூட்டி மகிழ்கிற ஓர் உவகைத் திருநாளாக பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாள் கொண்டாடப்படுகிறது. கட்டுப்பட்ட கால்நடை களை கைகூப்பி வணங்கி மனிதன் மனதார நன்றி காட்டும் ஒரு மட்டற்ற நந்நாளிது.

மாடுகளைக் குளிப்பாட்டி, சலங்கைகள், வெண்கல மணிகள் இணைத்த கழுத்துப்பட்டியுடன், வண்ண நூல் கயிற்று மூக்கணாங்கயிறுகள் அணிகின்றனர். கொம்புகளைச் சீவி வண்ணம் பூசி அத்தனை மாடுகளும் அழகாகின்றன. அன்றைய தினத்திலும் வெண் பொங்கலிட்டு வழிபட்டு மாடுகளுக்கு பச்ச ரிசி, வெல்லம்,
வாழைப்பழத்துடன் பொங்கல் படைத்து மாடுகளுக்கு ஊட்டி மகிழ்கின்றனர். மதுரை கிராமங்களில் மாட்டுப்பொங்கல் நாளில் எச்சித் தண்ணீர் தெளித்தல் என்றொரு நிகழ்வைத் தொடர்கின்றனர். பொங்கலோ பொங்கல்.. மாட்டுப்பொங்கல். பட்டி பெருக பால் பானை பொங்க நோவும்  பிணியும் தெருவோடு போக என்றபடி பொங்கலுண்டு மாடுகள் நீரருந்திய அந்த எச்சித் தண்ணீரை தொழுவத்தில் தெளிக்கின்றனர்.

இப்பொங்கல் நாளில் வீடுகளில் மாடுகள் வளர்க்காதோர் பூமாலைகள், பழங்கள் வாங்கிச் சென்று அருகாமை வீட்டு மாடுகளுக்கு அணிவித்து வழிபட்டு திரும்பும் வழக்கமும் இருக்கிறது. மாட்டுப்பொங்கல் தினத்தைப் பிரதானப்படுத்தியே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டுவென அடுத்தடுத்து தென்மாவட்ட  கிராமங்களில் வீர விளையாட்டுகளால் களை கட்டுகின்றன. இக்கொண்டாட்டத்தின் இறுதி நாளினை காணும் பொங்கல் நாள் என்றே அக்காலம் முதல் நம்மவர்கள் கொண்டாடி வந்துள்ளனர். தென்மாவட்ட  கிராமங்களில் ஆறு, குளக்கரையென நீர்த்தேக்கம் நிறைந்த சோலைகளில் பெண்கள் கூட்டாஞ்சோறு செய்து படைத்து வழிபாடு செய்வது நடக்கிறது.  எனவேதான் இதனை கன்னிப்பொங்கல் அல்லது கணுப்பொங்கல் என்றும் சொல்கின்றனர்.

ஏழைகளுக்கு தானம் தரும் ஓர் இனிய இரக்கத் திருநா ளாகவும் இந்நாள் போற்றப்பட்டிருக்கிறது. உறவுகள் ஒன்று கூடி மகிழ்ந்து களைகிற மட்டற்ற நாளாகவும் இந்நாள் மதிக்கப்பட்டு வருகிறது. இந்த  நாளில் இன்றும் சுற்றுலா இடங்களில், உறவினர் வீடுகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நாளில் மனித உறவுகள் பேசும் ஒற்றுமையே ஆண்டு  முழுக்க மன உணர்வுகளில் பலம் சேர்க்கிறது. இந்த நாலுநாள் கோலாகலம் உலகில் தமிழன் தவிர எவருக்கும் கிடைக்காத ஓர் அற்புதப் பரிசு. இந்நாட்களின் குதூகலிப்பு  ஆண்டு முழுக்க  நமக்குள் தங்கட்டும். ஆர்ப்பரிப்பில் உள்ளத்திற்குள் எப்போதும் உவகை பொங்கட்டும்.

புதன், 9 ஜனவரி, 2013

0 எனக்கு நானே போட்டி: அமலா பால்


சினிமாவில் எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன் என்று அமலா பால் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘நிமிர்ந்து நில்’, தெலுங்கில் ராம்சரணுடன் ‘நாயக்’, அல்லு அர்ஜுனுடன் ‘இடரம்மாயிலதோ’ படங்களில் நடித்துவருகிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் ஏற்றிருக்கிறேன். ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

தெலுங்கு ‘நாயக்’ படத்தில் திமிர் பிடித்த பெண்ணாக நடிக்கிறேன். இதில் சிரஞ்சீவி, ராதா சேர்ந்து நடித்த ஹிட் பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் நான் ஆடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சினிமாவில் ஹீரோயின்களுக்குள்தான் அதிக போட்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. யாரையும் எனக்கு போட்டியாக நினைக்கவில்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்.

என்னை குறிவைத்து தாக்குகிறார்கள் : மோகன்லால் கோபம்


சென்னை:என்னை குறி வைத்து தாக்குவது ஏன் என்றார் மோகன்லால்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருப்பவர் மோகன்லால். அவர் கூறியதாவது:மம்மூட்டியுடன் போட்டி போடுவதாக பரபரப்பு உண்டாக்குகிறார்கள். போட்டி இருக்கலாம். அதேநேரம் அவருடன் சேர்ந்து 53 படங்கள் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒப்பிடுதல் நடந்திருக்கிறது. எம்ஜிஆர் - சிவாஜி, நசீர் - சத்யன், சோமன் - சுகுமாறன், ரஜினி & கமல் என ஒப்பீடு இருக்கிறது. அதுபோல்தான் மம்மூட்டி - மோகன்லால். இப்போதுகூட பொருத்தமான கதை வந்தால் இருவரும் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறோம்.

சமீபகாலமாக என்னைபற்றி நிறைய எதிர்மறை தகவல்கள் வெளியிடுகிறார்கள். ‘கர்மயோதா’ என்ற பட போஸ்டரில் நான் புகைப்பிடிப்பதுபோன்று இருந்த போஸ்டரை பிரச்னைக்குரியதாக எழுதுகிறார்கள். என்னை ஏன் குறிவைக்கிறார்கள். நான் நடிகன் மட்டும்தான். படத்தில் குண்டர்களை தாக்குவதுபோல் நடிக்கிறேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா? என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது அறைக்கு பயோ மெட்ரிக் பூட்டு போட்டிருக்கிறேன். என்னுடைய கைரேகை வைத்தால் திறக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது என்னுடைய தனிப்பட்ட தியேட்டர் அறை. அங்கு விலைமதிப்பு மிக்க பொருட்கள் வைத்திருக்கிறேன். இதை யாருமே குறிப்பிடவில்லை. யானை தந்தம் வைத்திருப்பதாக வழக்கு பதிவு செய்தார்கள். பல வருடங்களாக அது என்னிடம் இருக்கிறது. அதற்கான லைசென்ஸ் இருக்கிறது. என் மீதான பல வழக்குகள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதை யாரும் எழுதுவதில்லை.

முன்னணி நடிகர்கள் யாருடனும் நான் நடிக்க விரும்பவில்லை: லட்சுமி மேனன்


நடிகை லட்சுமிமேனன். தமிழ் சினிமாவின் இன்றைய ஹாட் நாயகி லட்சுமி மேனன்தான். அவர் நடிக்க சுந்தரபாண்டியன், கும்கி இரண்டுமே அதிரடியாக ஜெயித்துவிட்டன.

முத்தக்காட்சியில் நடி... நெருக்கமா நடின்னு கட்டாயப்படுத்துவாங்க என்பதால் அஜீத், விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் யாருடனும் நான் நடிக்க விரும்பவில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்

தற்போது சசிகுமாருடன் ‘குட்டிப்புலி', விமலுடன் ‘மஞ்சப்பை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராசியான நாயகி என்ற பெயர் வந்துவிட்டதால், லட்சுமி மேனனை தங்கள் படங்களில் ஹீரோயினாக்க முன்னணி நடிகர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் லட்சுமியோ, முன்னணி நடிகர்களுடன் நடிக்க விருப்பமில்லை என்று அதிரடியாகக் கூறிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "ஒரு நல்ல நடிகையாக வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். வந்த வேகத்தில் அதற்கேற்ற படங்கள் கிடைத்தன. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டேன். இனி முன்னணி நடிகையாக வேண்டும். அதற்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும்.

ஆனால் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் நடிக்க வேண்டுமென்றால் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும். கூடவே, முத்தக்காட்சி, அதிக நெருக்கம் என்றெல்லாம் காட்சி இருக்கும். எனக்கு அது சரிப்பட்டு வராது. அதனால்தான் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டேன். எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். படங்களின் எண்ணிக்கை கணக்கல்ல... கொஞ்ச காலம் நடித்தாலும் டீசன்டாக நடித்துவிட்டுப் போய்விட வேண்டும்," என்றார்.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

இசையை ரசிக்கும் பசுக்கள் அதிகம் பால் கறக்கும்

புனேவில் உள்ள ஒரு பால் பண்ணையில் இருக்கும் மாடுகளுக்கு கர்நாடக இசை பாடல்கள் ஒலிபரப்ப‌ப்படுகிறது. புனேவில் அமைந்திருக்கும் பால் பண்ணை ஒன்றில் மாடுகளுக்கு மென்மையான மற்றும் கர்நாடக இசை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. நாள் முழுவதும் பண்ணையில் இருக்கும் பசுக்கள் இந்த இனிய பாடல்களை கேட்பதால்
அமைதியான சூழலில் நல்ல ஆரோக்கியத்துடனும் மனநலத்துடனும் இருப்பதாக பால் பண்ணையின் நிறுவனரான பாரக் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வகை இசை சிகிச்சையின் மூலம் பண்ணையின் பால் உற்பத்தி வழக்கத்தை விட 40 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இம்மாதிரியான இசை சிகிச்சை வெளிநாடுகளில் அதிகமாக காணப்பட்டாலும் இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது.