புதன், 9 ஜனவரி, 2013

என்னை குறிவைத்து தாக்குகிறார்கள் : மோகன்லால் கோபம்


சென்னை:என்னை குறி வைத்து தாக்குவது ஏன் என்றார் மோகன்லால்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருப்பவர் மோகன்லால். அவர் கூறியதாவது:மம்மூட்டியுடன் போட்டி போடுவதாக பரபரப்பு உண்டாக்குகிறார்கள். போட்டி இருக்கலாம். அதேநேரம் அவருடன் சேர்ந்து 53 படங்கள் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒப்பிடுதல் நடந்திருக்கிறது. எம்ஜிஆர் - சிவாஜி, நசீர் - சத்யன், சோமன் - சுகுமாறன், ரஜினி & கமல் என ஒப்பீடு இருக்கிறது. அதுபோல்தான் மம்மூட்டி - மோகன்லால். இப்போதுகூட பொருத்தமான கதை வந்தால் இருவரும் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறோம்.

சமீபகாலமாக என்னைபற்றி நிறைய எதிர்மறை தகவல்கள் வெளியிடுகிறார்கள். ‘கர்மயோதா’ என்ற பட போஸ்டரில் நான் புகைப்பிடிப்பதுபோன்று இருந்த போஸ்டரை பிரச்னைக்குரியதாக எழுதுகிறார்கள். என்னை ஏன் குறிவைக்கிறார்கள். நான் நடிகன் மட்டும்தான். படத்தில் குண்டர்களை தாக்குவதுபோல் நடிக்கிறேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா? என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது அறைக்கு பயோ மெட்ரிக் பூட்டு போட்டிருக்கிறேன். என்னுடைய கைரேகை வைத்தால் திறக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது என்னுடைய தனிப்பட்ட தியேட்டர் அறை. அங்கு விலைமதிப்பு மிக்க பொருட்கள் வைத்திருக்கிறேன். இதை யாருமே குறிப்பிடவில்லை. யானை தந்தம் வைத்திருப்பதாக வழக்கு பதிவு செய்தார்கள். பல வருடங்களாக அது என்னிடம் இருக்கிறது. அதற்கான லைசென்ஸ் இருக்கிறது. என் மீதான பல வழக்குகள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதை யாரும் எழுதுவதில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக