வெள்ளி, 5 அக்டோபர், 2012

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 204வது ஆலயத்திருவிழா

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 204வது ஆலயத்திருவிழாவனது அருட்தந்தை X.I ரஜிவன் அடிகளாரின் தலைமையில் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.இதில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜீட்ஜோண்சன் மற்றும் திருச்சிலுவை ஆலய பங்குதந்தை மதுராங்கன் குரூஸ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.அதனைத்தொடர்ந்து அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பண்டம் மக்களுக்காக வெளியில் எடுத்துவைக்கப்பட்டது.அதன் பின் திருப்பண்டம் ஆசிர்வதிக்கப்பட்டது கொடிஇறக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் குளிர்பானமும் வழங்கப்பட்டது.
1808 ஆம் ஆண்டில் பஸ்குவால் முதலியார் என்பவரால் இவ்வாலயம் சொறிக்கல் கொண்டு அமைக்கப்பட்டது.
1850களில் அமலமரித்தியாகிகள் சபையினரால் ஆலயத்துடன் இணைந்து பாடசாலை ஒன்றினை நிறுவினர். கல்முனைப் பங்குடன் இணைந்திருந்த இப்பங்கினை 07.10.1896இல் ஆயர் பேரருட் திரு.கஸ்ரன் றொபிஷே தனிப்பங்காக பிரகடனப்படுத்தினார். இதனது முதற்பங்குக் குரு அருட்திரு ஜோசப் மேரி அடிகள் (யே.ச) இன்றுவரை 27 பங்குத்தந்தையர்கள் பணியாற்றியுள்ளனர்கள். புரட்டாதி 14ஆம் திகதி இவ்வாலய விழாவாகும்.


சிந்துஜன் 
கல்முனை











0 கருத்துகள்:

கருத்துரையிடுக